இப்ப விழுமோ? எப்ப விழுமோ?

Update: 2024-12-01 17:59 GMT
வானமாதேவி ஊராட்சி கட்டாரச்சாவடி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்களில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து அதில் உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது மிகவும் பலவீனமடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்