பழுதடைந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2024-12-01 17:13 GMT

பாலக்கோடு அடுத்த எர்ரனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட தளவாய் அள்ளிபுதூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த 6 மாதங்களாக எந்திரம் பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் பழுதடைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரி செய்து மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வம், எர்ரனஅள்ளி.

மேலும் செய்திகள்