கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் காமராஜர் நகருக்கு ஆற்றுநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக ஆற்றுநீர் சரியாக வினியோகிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீரின்றி சிரமப்படுகின்றனர். உடனே காமராஜர் நகருக்கு குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.