சென்னை அடையாறு, வெங்கடரத்தினம் நகரில் சில நாட்களாக மெட்ரோ குடிநீர் வரவில்லை. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் குடிநீர்வாரிய அதிகாரிகள் குடிநீர் கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.