பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் இப்பகுதி மக்கள் போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களுக்கு போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.