வடிகால் அமைக்கும் பணி நிறைவுபெறுமா?

Update: 2024-12-01 10:03 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பஸ் நிலையம் எதிரே உள்ள சாலையோரத்தில் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் நிறைவு பெறாமல் இருக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு முன்பு தேங்கும் மழைநீரால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வடிகாலிலும் குப்பைகள் குவிந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடித்திட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்