பர்கூரில் இருந்து ஜெகதேவி செல்லும் சாலையில் சிப்காட் உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் சாலை முழுவதும் தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே தாமதம் இன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-முருகேஷ், பர்கூர்.