தேங்கும் தண்ணீரால் அவதி

Update: 2024-11-10 11:58 GMT
  • whatsapp icon

கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி புதுப்பாளையம் பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை நிரம்பி கழிவுநீருடன் கலந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இந்த தண்ணீர் சாலையில் தேங்கி வருகிறது. இதனால் சாலை பழுதாகி வருகிறது. மேலும் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு கழிவுநீர் கலப்பதை தடுப்பதோடு தண்ணீர் மாற்று வழியில் வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்