சேலம் தேவாங்கபுரம் எக்ஸ்டென்சன் தெருவில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. அந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் குழாய் உள்ளது. ஆனால் அதில் குடிநீர் வருவதில்லை. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. மேலும் குடிநீரை பொதுமக்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயகுமார், சேலம்.