வீணாகும் குடிநீர்

Update: 2024-10-06 17:54 GMT

பாலக்கோடு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது கல்கூடஅள்ளி மேம்பாலம். இந்த பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இ்ந்த குடிநீர் குழாயை சரி செய்ய தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலை பகுதியில் குழி தோண்டப்பட்டது. தற்போது வரை இந்த குழி மூடப்படாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தவறி விழுந்து காயமடைகிறார்கள். இது குறித்து பலமுறை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து குழியை சீரமைக்க வேண்டும்.

-ஆறுமுகம், ரெட்டியூர்.

மேலும் செய்திகள்