தர்மபுரி-பாலக்கோடு வழியாக 4 வழி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் பல்வேறு இடங்களில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சோகத்தூர், பாலக்கோடு பகுதிகளில் மழை பெய்யும் போது சர்வீஸ் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இத்தகைய பகுதிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சர்வீஸ் சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க உரிய வடிகால் வசதியை விரைவாக ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜய், தர்மபுரி.