கோவை மாநகராட்சி 3-ம் வார்டு அத்திப்பாளையம்-சின்னவேடம்பட்டி மெயின் ரோட்டில் கோதண்டராமர் கோவில் முன்புறம் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த ரோட்டில் தண்ணீர் ஆறுபோல் ஓடுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில்லை. இதன்காரணமாக அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அதிகாரிகள், உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோபால், வேடம்பட்டி.