சாலையில் ஓடும் குடிநீர்

Update: 2024-10-06 13:09 GMT

கோவை சாஸ்திரி ரோடு வ.உ.சி. காலனி அருகே சாலையோர குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால் குடிநீர் வீணாக சாலையில் பெருக்ெகடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக சாலை சேதமடைவதோடு வாகன விபத்துகளும் நடக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கும் சீராக குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லிங்கம், கோவை.

மேலும் செய்திகள்