பழுதடைந்த குடிநீர் எந்திரம்

Update: 2024-09-22 17:26 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்ட அள்ளி பஸ் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் சுமார் 6 மாதங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் பஸ் நிலையம் வரும் பொதுமக்கள், பயணிகள் குடிநீரை பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தை சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

-கோவிந்தன், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்