கொட்டாரம்-வட்டக்கோட்டை நெடுஞ்சாலையில் மகாராஜபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் வினியோகம் செய்யும் வால்வு பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த வால்வை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.