தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் பட்டுநூல்காரதெரு மற்றும் ஆஸ்பத்திரி சாலையிலும் பல வருடங்களாக பயன்பாடற்ற அடி குழாய் உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் அடி குழாய் இருப்பது தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பயனற்ற அடி குழாயை அப்புறப்படுத்த் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் பட்டுக்கோட்டை