பெரம்பலூர் நகரப் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 15 நாட்களுக்கு ஒரு முறை காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 20 நாட்கள் ஆகியும் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளதால் பெரம்பலூர் நகரப் பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.