சேத்தியாத்தோப்பு அருகே கட்டாரச்சாவடி கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் தொட்டியை முறையாக சுத்தம் செய்யாததால் இங்கிருந்து வினியோகம் செய்யப்படும் குடிநீரை குடிக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே பலவீனமாக உள்ள இந்த மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.