தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அமானிமல்லாபுரம் சாலையில் உள்ள போலீஸ் நிலையம் முன்பு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உள்ளது. இந்த குடிநீர் குழாய் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்வோர் கீழே விழும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவனேஷ், மாரண்டஅள்ளி.