குடிநீர் வசதி வேண்டும்

Update: 2024-05-12 14:40 GMT


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் குமரன்குடி கீழத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் இந்த பகுதியில் குடிநீர் சரியாக வருவதில்லை. தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதாகி உள்ள குடிநீர் குழாயை சீரமைத்து, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழபுரம், ஜெய்கணேஷ்

மேலும் செய்திகள்