கோவையில் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. இந்த வெயிலிலும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலை உள்பட பல்வேறு தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள் வெளியில் நடமாடி வருகின்றனர். அவர்களின் தாகம் தணிக்க உதவும் வகையில், மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.