பயன்பாட்டிற்கு வராத நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-02-04 13:35 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் படநிலை ஊராட்சியில் உள்ள காடுவெட்டி கிராமத்தில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது விக்கிரவாண்டி -தஞ்சாவூர் வரை நான்கு வழி சாலைக்காக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலையின் ஓரத்தில் அமைக்கபட்டுள்ள இந்த நீர் தேக்க தொட்டிக்கு பதிலாக, தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் தனியார் நிறுவனம் புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஒன்றை அமைத்து உள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பொதுமக்கள் தண்ணீருக்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். உடனடியாக இந்த புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்