கோவை மாநகராட்சி 88-வது வார்டு குனியமுத்தூர் ஜே.ஜே. நகரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. ஆனால் இதுவரை அந்த உடைப்பு சரி செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் கசிந்து சாலையில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக சாலை சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குழாய் உடைப்பை சரி செய்து, சாலையை சீரமைக்க வேண்டும்.