சேலம் ஆண்டிப்பட்டி 20-வது வார்டில் தண்ணீர் தொட்டி உள்ளது. கடந்த சில மாதங்களாக அந்த தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். எனவே அப்பகுதி மக்களின் நலன் கருதி இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-தனசேகர், ஆண்டிப்பட்டி, சேலம்.