கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை- பாலக்கோடு சாலையில் தனியார் திருமண மண்டபம் அருகில் ஒகேனக்கல் குடிநீர் குழாய் சேதமடைந்து குடிநீர் சாலையில் வீணாக செல்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும் பொது மக்கள் மீது தண்ணீர்படுகிறது. மேலும் சாலை சேதமடைந்து வருகிறது. எனவே இந்த குடிநீர் குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கடேசன், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.