குடிநீர் வழங்க கோரிக்கை

Update: 2023-09-20 17:34 GMT

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 2017-ம் ஆண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் கட்டப்பட்டது. இந்த குடிநீர் நிலையத்திற்கு சில நாட்களில் பேரூராட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்குவதை நிறுத்தியது. அந்த பகுதியில் அரசு மருத்துவமணை, அரசு மேல்நிலை பள்ளி, ரெயில் நிலையம், குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இல்லாமல் அவதியடைகின்றனர். எனவே இந்த குடிநீர் நிலையத்தை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-அறிவழகன், பொம்மிடி, தர்மபுரி.

மேலும் செய்திகள்