கலவையை அடுத்த வெள்ளம்பி கிராமத்தில் மேல்நிலை நீர்த்ேதக்கத் தொட்டி பழுதடைந்துள்ளது. அதன் அருகில் புதிதாக மற்றொரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. புதிய தொட்டியில் குடிநீர் நிரப்பாமல், பழைய தொட்டியிலேயே குடிநீர் நிரப்பப்படுகிறது. பழைய தொட்டியில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்கள் வழியாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. எனவே புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பழுதடைந்த பழைய குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்.
-புகழ், திமிரி.