வேட்டவலம் பேரூராட்சி 7-வது வார்டில் உள்ள பெரியார் தெருவில் கடந்த ஒரு மாதமாக மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதில் பாசி பிடித்து கொசு உற்பத்தியாகி மலேரியா, டெங்கு பரவ வாய்ப்புள்ளது. இதுபற்றி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும்.
-பிரவீன், வேட்டவலம்.