வாரச்சந்தையில் கட்டமைப்பு வசதிகள் இல்லை...?
சேவூர் ஊராட்சிக்குட்பட்ட கைகாட்டி, கோபி நம்பியூர் சாலையில் திங்கட்கிழமை தோறும் காய்கறி சந்தையானது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு ஏற்ப இந்த காய்கறி சந்தையை நம்பி வந்து செல்கிறார்கள். ஆனால் இங்கு வியாபாரிகளுக்கு ஏற்றவாறு போதுமான கடை கட்டமைப்பு வசதிகள் சந்தைக்குள் ஏதும் இல்லாததால் வியாபாரிகள் மழை வெயில் வரும் போது பாதுகாப்பு இல்லாமல் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தீடிர் மழை வரும்போது எல்லாம் அனைத்து காய்கறி, மளிகை சாமான்களை பாதுகாக்க முடியாமல் சேதாரமாகி விடுகிறது என வியாபாரிகள், பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். விரைவில் கட்டமைப்புகளை விரிவுபடுத்திட எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
-சந்தோஷ், போத்தம்பாளையம்.