திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது தலையாம்பள்ளம். அங்குள்ள கோவில் தெரு, கிழக்கு வீதி, தச்சம்பட்டு சாலை உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறு மின்விசை தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒருசில இடத்தில் குடிநீர் தொட்டி பராமரிக்காமல் உள்ளது. ஆழ்துளை கிணறு மின் மோட்டார் பழுதாகி உள்ளது. இதனால் குடிநீர் தொட்டிகள் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. சிறு மின்விசை தொட்டியை சீரமைத்து, மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
-அஜித், தலையாம்பள்ளம்.