வேலூரை அடுத்த சித்தேரியில் ஆதிதிராவிடர் காலனியில் பஜனை கோவில் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்தத் தொட்டி அமைக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் ஆகிறது. தற்போது குடிநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. குடிநீா் ெதாட்டி எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளதால் இதனை அகற்ற வேண்டும். தொட்டியால் எந்தப் பயன்பாடும் இல்லை. எனவே விபரீதம் ஏற்படும் முன் குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும்.
-ஆம்ஸ்ட்ராங், வேலூா்.