வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக கோவில் வளாகத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழாயில் மாதக்கணக்கில் தண்ணீர் வராமல் உள்ளது. இதனால் பக்தர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கோவில் நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலன், வேலூர்..