திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏதும் கிடையாது. இதனால் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் குடிநீருக்காக அல்லல்படும் அவல நிலை உள்ளது. எனவே கலெக்டர் அலுவலகத்தில் வந்து செல்லும் பொது மக்களுக்கு ஏதுவாக குடிநீர் வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-சுரேஷ், திருப்பத்தூர்.