ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2023-03-05 10:28 GMT

ஜோலார்பேட்டை ஒன்றியம் அம்மாணங்கோவில் ஊராட்சி பகுதியில் உள்ள நாயனத்தியூரில் அப்பகுதி பொது மக்களுக்கு கடந்த 1963-ம் ஆண்டு கட்டப்பட்ட மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தற்போது கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி பயனற்ற நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இந்த மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றக்கோரி பல முறை புகார் கொடுத்தும் இந்நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தக் குடிநீர் தொட்டி எந்த நேரத்திலும் குடியிருப்பு பகுதியில் இடிந்து விழும் அபாயம் உள்ளது. ஆபத்து நடக்கும் முன் குடிநீர் ெதாட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆனந்தன், கூட்டுறவு சங்கம் இயக்குனர், புதுப்பேட்டை.

மேலும் செய்திகள்