வந்தவாசி நகராட்சிக்கு உட்பட்ட 19-வது வார்டில் மீனவர் தெருவில் ஆழ்துளை கிணறு அமைத்து 3 மாதங்களுக்கு மேல் கிடப்பில் போடப்பட்டது. இந்த ஆழ்துளை கிணறு மூடாமல் அப்படியே இருப்பதால் குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறக்க நேரிடும் அபாயம் உள்ளது. உடனே நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசு நடவடிக்கை எடுத்து அசம்பாவிதத்தை தவிர்க்க வேண்டும்.
-கந்தன், வந்தவாசி.