குடிநீர் தொட்டி சேதம்

Update: 2025-11-16 17:39 GMT

வந்தவாசியை அடுத்த பிருதூர் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டி 2006-ம் ஆண்டு கட்டப்பட்டது. 2015-ம் ஆண்டு சீரமைப்பு செய்யப்பட்டது. தற்போது குடிநீர் தொட்டி சேதம் அடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சவுந்தரராஜன், பிருதூர்.

மேலும் செய்திகள்