அணைக்கட்டு தாலுகா அகரம் ஊராட்சி மராட்டிப்பாளையத்தில் போர் மோட்டார் பழுதாகி பல நாட்கள் ஆகிறது. இதனால், எங்கள் பகுதியில் குடிநீர் கிடைக்கவில்லை. வெயிலில் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். போர் மோட்டாரை பழுது நீக்கி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.கே.லட்சுமணன், அகரம்.