குடிநீர் வால்வை மூட வேண்டும்

Update: 2024-06-30 19:00 GMT

வேலூர் சத்துவாச்சாரி பகுதி-3 விக்னேஸ்வர் நகர் தெருவில் குடிநீர் லைன் திருப்பி விடும் வால்வில் தண்ணீர் தேங்கி உள்ளது. நகராட்சி ஊழியர்கள் அதில் உள்ள பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எடுக்காமல் அப்படியே தண்ணீர் வால்வை திறந்து விடுகிறார்கள். இந்தத் தண்ணீரை குடிக்கும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்தக் குழியில் சிறுவர்கள், வயதானவர்கள் தவறி விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வால்வை மூட வேண்டும்.

-ராஜி, வேலூர். 

மேலும் செய்திகள்