வேலூர் அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் அருகே சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு குடிநீர் குழாய் வால்வு உள்ளது. அந்த வால்வு பகுதியில் இருந்து தண்ணீர் கசிந்து வீணாக செல்கிறது. மேலும் அதை சரி செய்யும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் வெகு நாட்கள் ஆகியும் அந்தப் பணி முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமராவ், வேலூர்.