வேலூர் மாவட்டம் துத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட சிறுகளம்பூர் கிராமத்தில் மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் தண்ணீர் தொட்டியில் குழாய் உடைந்து பல நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி கொண்டிருக்கிறது. அருகில் இருக்கும் மின் பெட்டி சேதம் அடைந்துள்ளது. தண்ணீர் வீணாகாமல் இருக்க புதிய குழாய்களை பொருத்த வேண்டும். மேலும் ஆபத்தான நிலையில் இருக்கும் மின்பெட்டியை மாற்றி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கு.விக்னேஷ், சிறுகளம்பூர்.