திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வத்தூர் கிராமத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர்த்தேக்கத் தொட்டி அங்கன்வாடி மையம் அருகில் கட்டப்பட்டது. அந்தத் தொட்டி தற்போது பழுதடைந்து காணப்படுகிறது. அந்தத்தொட்டியை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக குடிநீர்த் தொட்டி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.மூர்த்தி, செவ்வத்தூர்-புத்தூர்.