வேலூர் மாநகராட்சி 47-வது வார்டு சலவன்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறுகிறது. குடிநீர் வெளியேறுவதை யாரும் கண்டு கொள்வது இல்லை. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-சதீஷ், வேலூர்.