திருப்பத்தூருக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி மெயின் ரோடு ஹவுசிங் போர்டு கூட்ரோடு அருகே காந்தி சிலை எதிரே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் ஒரு வாரமாக வீணாக வெளியேறி வருகிறது. வெளியேறிய தண்ணீர் அந்தப் பகுதியில் குளம்போல் தேங்கி காட்சியளிக்கிறது. உடனடியாக காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து, தண்ணீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்.
ஐ.வி.எல்.கோவிந்தராஜ் திருப்பத்தூர்