நாட்டறம்பள்ளிைய அடுத்த வேட்டப்பட்டு பகுதியில் சிமெண்டு சாலையின் நடுவே ஆழ்துளை கிணறு போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆழ்துளை கிணற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை ஓரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இல.குருசேவ், உறுப்பினர், நாட்டறம்பள்ளி.