‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2023-10-08 17:33 GMT

திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் அண்ணா நகர் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் வீணாக சென்றது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சரி செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-சந்தானம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்