திருவெண்ணெய்நல்லூர்தடுத்தாட்கொண்டூர் பழைய காலனியில் மினி குடிநீர் தொட்டி பழுதடைந்து உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் மாதம்பட்டு மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மினி குடிநீர் தொட்டியை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.