திருவாரூர் மாவட்டம் புலிவலம் கிராமத்தில் எஸ்.எம்.ஏ. நகர் உள்ளது. இப்பகுதி மக்களின் வசதிக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பின்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி செயல்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீருக்காக பொதுமக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வரும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பார்களா?