சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் காரைக்குளம் ஊராட்சி என்.புக்குளி கண்மாய்க்கு நீர்வரத்து வரும் வரத்து கால்வாய் மேடாக உள்ளது. இதனால் கண்மாய்க்கு வரக்கூடிய நீரின் அளவு பாதிக்கப்படுகிறது. இந்த கண்மாயே இப்பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும், விவசாய பாசனத்திற்கு பயன்படுகிறது. எனவே வரத்து கால்வாயை தூர்வார வேண்டும்.