மைதானத்தில் அபாய பள்ளம்

Update: 2022-08-01 13:21 GMT
திருவாரூர் தியாகராஐபுரம் ஊராட்சியில் தாழைக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அந்த பகுதி பஞ்சாயத்திற்கு சொந்தமான மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள், சிறுவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் விளையாடி வருகின்றனர். இந்த மைதானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பாதி பணிகள் நடைபெற்றுள்ளது. மீதி பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளன. தற்போது மைதானத்தில் அந்த பள்ளம் அபாய பள்ளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் விளையாடுபவர்கள் தடுமாறி பள்ளத்தில் விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்