தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆவிடநல்லவிஜயபுரம் சங்கரன்தெருவில் பொதுமக்கள் வசதிக்காக ஆழ்துளைகிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் குடிநீர் தொட்டி முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. தொட்டியை சுற்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும், குடிநீர் தொட்டியை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சிமெண்டு தளமும் பெயர்ந்து உள்ளது. அதுமட்டுமின்றி தொட்டியில் குடிநீர் வருவதும் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்களா?